நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் மூன்றாவது மாரத்தான் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு வெள்ளக்கோவில் வட்டமலை அணைக்காக நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 2500மேல் கலந்து கொண்டார்கள்.
இரண்டாம் ஆண்டு 100% வாக்கு பதிவிற்காக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
சுமார் 4250 போட்டியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த ஆண்டு பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
இந்த மாரத்தான் போட்டி 20/03/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளகோவில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
மாரத்தான் போட்டியில் பங்கு பெற எப்படி பதிவு செய்வது?
மாரத்தான் போட்டியில் பங்கு பெறுவதற்கு கிளிக் செய்யவும்
மாரத்தான் போட்டி எத்தனை மணிக்கு தொடங்குகிறது???
வெள்ளகோவில் மாரத்தான் போட்டி 20/03/2022 காலை 6 மணிக்கு தொடங்க இருக்கிறது. ஆகையால் அனைவரும் 4 மணிக்கு போட்டி நடக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.
மாரத்தான் போட்டிகள் எத்தனை பிரிவுகளில் நடைபெறுகிறது?
மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது.
4K – 8+Yrs 15வயது வரை
8 K – 12+Yrs
12 K -16+Yrs
4 கிலோ மீட்டர் பிரிவில் கலந்து கொள்ள பதிவு தொகை 1000நபர்களுக்கு இல்லை 8 வயதிற்கு மேல் 15 வயது வரை கலந்து கொள்ளலாம்.
8 கிலோ மீட்டர் பிரிவில் கலந்து கொள்ள 100 ரூபாய் பதிவுக்கட்டணம்
12 கிலோ மீட்டர் பிரிவில் கலந்து கொள்ள 200 ரூபாய் பதிவு கட்டணம்
சீருடைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா??
கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு டீ ஷர்ட் வேண்டும் என்றால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்..
பிப் நம்பர் கண்டிப்பாக வாங்க வேண்டுமா??

மாரத்தான் போட்டியில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக பிப் நம்பர் இருந்தால் மட்டுமே அவரை வெற்றியாளராக ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆதார் கார்டு அவசியமா?
பிப் நம்பர் வாங்கும் போது கண்டிப்பாக ஆதார் கார்டு அவசியம் கொண்டு வர வேண்டும்.
ஆதார் கார்டு நம்பர் இல்லாமல் பிப் நம்பர் மற்றும் சீருடை வழங்கப்படமாட்டாது. வயதை உறுதிப்படுத்த ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது.
மாரத்தான் போட்டிக்கான பிப் நம்பர் பெற பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அன்பு அங்காடி மற்றும் மகாத்மா காந்தி அறக்கட்டளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்…
உணவு வசதி செய்யப்பட்டுள்ளதா?
போட்டியாளர்களுக்கு எந்த வித உணவு வசதியும் செய்யப்படவில்லை.
போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு என்னென்ன பரிசுகள் வழங்குகிறீர்கள்??
போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் E சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் போட்டியில் வெற்றி பெறும் 3 பேருக்கு பரிசுத் தொகையுடன் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
பதிவு செய்ய கடைசி நாள் எப்போது?
13/03/2022 அன்று அல்லது 4000 பேர் பதிவு செய்தல் அதற்கு முன்பே பதிவு செய்வது நிறுத்தப்படும்.
தங்குவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளதா?
தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.