சென்னை, நெய்வேலி ஈரோடு புத்தகத் திருவிழா போல தற்போது புகழ்பெற்று வரும் வெள்ளக்கோவில் புத்தகத் திருவிழா.
புதிய படைப்பாளர்களின் புதிய நூல்கள் தயாராகிவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில் இருந்தும், வெள்ளக்கோவில் புத்தகத் திருவிழாவுக்காக பொதுமக்களும் புத்தக ஆர்வலர்களும் புத்தக அரங்கை நோக்கி வர தொடங்கியுள்ளார்கள்.
‘மகாத்மா காந்தி நற்பணி மன்றம் அறக்கட்டளை’ என்னும் அமைப்பு கடந்த 23 வருடங்களாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக ‘வெள்ளக்கோவில் புத்தகத் திருவிழா’ சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த 3வது வெள்ளக்கோவில்புத்தகத் திருவிழா-2022
வெள்ளகோவில் ஆர்பிஎஸ் மஹாலில் ஐந்து நாட்கள், வரும் ஜூலை 1ம் ஆம் தேதி முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
மாலை நேர கருத்தரங்கு சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.
மக்களுக்கு சமூக சேவை செய்து வரும் சமூக அமைப்புகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.