மாரத்தான் பற்றிய முழு விபரம்…

வெள்ளகோவில் மாரத்தான் போட்டி எத்தனை மணிக்கு தொடங்குகிறது???

வெள்ளகோவில் மாரத்தான் போட்டி அன்று காலை 6 மணிக்கு தொடங்க இருக்கிறது ஆதலால் போட்டியாளர்கள் அனைவரும் 2 மணி நேரங்களுக்கு முன் பாகவே போட்டி நடக்கும் இடத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும்…

மாரத்தான் போட்டி எங்கு துவங்கி எங்கு முடிகிறது??

மாரத்தான் போட்டியானது வெள்ளகோவில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து தொடங்குகிறது.கீழே உள்ள படம் ஆறு கிலோமீட்டர் செல்லும் பாதை…

ஆறு கிலோமீட்டர் போட்டி எங்கு தொடங்கப்படுகிறது???

கோயம்புத்தூர் சாலையில் சென்று பாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து இடதுபுறம்‌ திரும்பி சீரங்கராயன்கவுண்டன்வலசு பிரிவிலிருந்து அமராவதி நகர் நோக்கி சென்று அங்கிருந்து சிவநாதபுரம் விநாயகர் கோவில் அருகில் சென்று அங்கிருந்து நேராக கடைவீதி தாராபுரம் ரோடு வந்தடைகிறது பின்பு கோவை ரோட்டில் உள்ள புறப்பட்ட இடத்திற்கே வந்து நிறைவு பெறுகிறது 6கிலோமீட்டர் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

  மேலே உள்ளது 12 கிலோமீட்டர் செல்லும் பாதை…

12 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி எங்கு துவஙகி எங்கு முடிகிறது??

துவங்கும் இடம் வெள்ளகோவில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அங்கிருந்து

கோயம்புத்தூர் சாலையில் சென்று பாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து இடதுபுறம் திரும்பி சீரங்கராயன் கவுண்டன் வலசு பிரிவிலிருந்து அமராவதி நகர் நோக்கி சென்று அங்கிருந்து சிவநாதபுரம் விநாயகர் கோவில் அருகில் சென்று அங்கிருந்து நேராக தீத்தாம்பாளையம் சேரன் நகர் வழியாக சேரன் நகரிலிருந்து அக்கரைபாளையம்புதூர் செம்மண்டம்பாளையம் டெலிபோன் எக்சேஞ்ச் வழியாக கடைவீதி வந்து வந்தடைகிறது.பின்பு கோவை ரோட்டில் உள்ள புறப்பட்ட இடத்திற்கே வந்து நிறைவு பெறுகிறது 12கிலோமீட்டர் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

பிப்‌ நம்பர் கண்டிப்பாக வாங்க வேண்டுமா??

மாரத்தான் போட்டியில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக பிப் நம்பர் இருந்தால் மட்டுமே அவரை வெற்றியாளராக ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆதார் கார்டு அவசியமா??

பிப் நம்பர் வாங்கும் போது கண்டிப்பாக ஆதார் கார்டு அவசியம் கொண்டு வர வேண்டும் ஆதார் கார்டு நம்பர் இல்லாமல் பிப் நம்பர் மற்றும் சீருடை வழங்கப்படமாட்டாது.வயதை உறுதிப்படுத்த ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது.

சீருடைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா??

மாரத்தான் போட்சீருடைக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா??

மாரத்தான் போட்டிக்கான சீருடை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அன்பு அங்காடிக்கு அருகில் விழா பந்தல் அமைக்கப்படும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.வரும் புதன்கிழமை மாலை 4:00 முதல் வியாழன் வெள்ளி பகல் காலை 11:00 மணி முதல் இரவு 8:00 வரை மூன்று நாட்கள் மட்டும் வழங்கப்படும்.போட்டி நடைபெறும் தினத்தன்று பிப் நம்பர் முன்பதிவு கடைசி நேரத்தில் சீருடை எதுவும் வழங்கப்படமாட்டாது.சீருடைக்கு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.

உணவு வசதி செய்யப்பட்டுள்ளதா?

போட்டியாளர்களுக்கு எந்த வித உணவு வசதியும் செய்யப்படவில்லை.

போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு என்னென்ன பரிசுகள் வழங்குகிறீர்கள்??


போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது

போட்டியில் வெற்றி பெறும் 5 பேருக்கு பரிசுத் தொகையுடன் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

மேலும் 10 நபர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் 10 போட்டியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.

 பதிவு செய்ய கடைசி நாள் எப்போது???

 பதிவு செய்ய வெள்ளிக்கிழமை அன்று கடைசி அல்லது 4000 நபர்களை கடந்தால் பதிவுசெய்வது நிறுத்தப்படும்.

 தங்குவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளதா…

தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கண்டிப்பாக ஆண்கள் தங்குவதற்கு மட்டும் தற்போது ஏற்பாடு வெள்ளகோவில் கடைவீதி அருகே உள்ள பொன்னுச்சாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெண்களுக்கு தேவையெனில் தனியாக ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.தேவைப்படுவோர் முன்கூட்டியே வாட்ஸ்அப் தகவலோ அல்லது போன் செய்தோ பதிவு செய்ய வேண்டும்.

மேற்கொண்டு ஏதாவது உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் இருக்கும் 9150003008வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களது சந்தேகங்களையும் கேள்விகளை பதிவுசெய்யவும் விரைவில் பதில் வரும்…

நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!